ஃப்ரூட் கேசரி
தேவையான பொருட்கள்
- ரவை – 1 டம்ளர்,
- சர்க்கரை – 2 டம்ளர்,
- கேசரி பவுடர் – 1/2 டீஸ்பூன்,
- ஏலக்காய் – 2,
- முந்திரி – 5,
- பாதாம் எசன்ஸ் – சில துளிகள்,(விருப்பப்பட்டால்)
- ஆப்பிள் – சிறு துண்டு,
- அன்னாசி – சிறு துண்டு,
- பேரீச்சம் பழம் – 3,
- பச்சை திராட்சை – 6,
- ட்ரை ஃப்ரூட்ஸ் – 1 ஸ்பூன்,
- நெய் – 1/2 டம்ளர்.
செய்முறை
- ஆப்பிள், அன்னாசி, பேரீச்சம் பழம் எல்லாவற்றையும் பொடி துண்டுகளாக நறுக்கவும்.
- 1 ஸ்பூன் நெய்யில் முந்திரியை ஒடித்து, வறுத்து எடுக்கவும்.
- அதே நெய்யில் எல்லா பழ துண்டுகளையும், ட்ரை ஃப்ரூட்ஸையும் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- ரவையை 1 ஸ்பூன் நெய் விட்டு, வறுத்து எடுக்கவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டரை டம்ள்ர் தண்ணீர் விட்டு, கேசரி பவுடர் போட்டு அடுப்பில் வைக்கவும்.
- தண்ணீர் நன்கு கொதிக்கும் போது, ரவையை தூவி கட்டியில்லாமல் கிளறவும்.
- ரவை வெந்ததும், சர்க்கரையை சிறுது சிறிதாக சேர்த்து, கட்டியின்றி கிளறவும்.
- கேசரி கெட்டியாக வரும் போது, நெய், தூளாக்கிய ஏலக்காய், எசன்ஸ், பழ துண்டுகள், முந்திரி எல்லாம் போட்டு, கிளறி இறக்கவும்.