ஃப்ரூட் கேசரி

October 12, 2009

 ஃப்ரூட் கேசரி

தேவையான பொருட்கள்

  • ரவை – 1 டம்ளர்,
  • சர்க்கரை – 2 டம்ளர்,
  • கேசரி பவுடர் – 1/2 டீஸ்பூன்,
  • ஏலக்காய் – 2,
  • முந்திரி – 5,
  • பாதாம் எசன்ஸ் – சில துளிகள்,(விருப்பப்பட்டால்)
  • ஆப்பிள் – சிறு துண்டு,
  • அன்னாசி – சிறு துண்டு,
  • பேரீச்சம் பழம் – 3,
  • பச்சை திராட்சை – 6,
  • ட்ரை ஃப்ரூட்ஸ் – 1 ஸ்பூன்,
  • நெய் – 1/2 டம்ளர்.
 

 

செய்முறை

  • ஆப்பிள், அன்னாசி, பேரீச்சம் பழம் எல்லாவற்றையும் பொடி துண்டுகளாக நறுக்கவும்.
  • 1 ஸ்பூன் நெய்யில் முந்திரியை ஒடித்து, வறுத்து எடுக்கவும்.
  • அதே நெய்யில் எல்லா பழ துண்டுகளையும், ட்ரை ஃப்ரூட்ஸையும் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  • ரவையை 1 ஸ்பூன் நெய் விட்டு, வறுத்து எடுக்கவும்.
  • ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டரை டம்ள்ர் தண்ணீர் விட்டு, கேசரி பவுடர் போட்டு அடுப்பில் வைக்கவும்.
  • தண்ணீர் நன்கு கொதிக்கும் போது, ரவையை தூவி கட்டியில்லாமல் கிளறவும்.
  • ரவை வெந்ததும், சர்க்கரையை சிறுது சிறிதாக சேர்த்து, கட்டியின்றி கிளறவும்.
  • கேசரி கெட்டியாக வரும் போது, நெய், தூளாக்கிய ஏலக்காய், எசன்ஸ், பழ துண்டுகள், முந்திரி எல்லாம் போட்டு, கிளறி இறக்கவும்.

பீட்ரூட் அல்வா

October 5, 2009
தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 2
பால் – 2 மேஜைக் கரண்டி
கண்டென்ஸ்டுமில்க் – 2 மேஜைக் கரண்டி
நெய் – 1/2 கோப்பை
ஏலக்காய் – 4
உலர்ந்த திராட்சை – 5
சர்க்கரை – 1 1/2 கோப்பை
வறுத்த முந்திரி – 10

செய்முறை

1. பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.

2. துருவிய பீட்ரூட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

3. அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும்.

4. நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும்.


கல்கண்டு பொங்கல்

October 5, 2009

தேவையானவை

பச்சரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – கால் கப்
பால் – 1 கப்
கல்கண்டு – 2 கப்
நெய் – கால் கப்
முந்திரி திராட்சை சேர்த்து ஒரு கைப்பிடி
ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை
பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ – சிறிது

செய்யும் முறை

பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி குக்கரில் போ‌ட்டு, தேவையான அளவு பாலும், தண்ணீரும் ஊற்றி குழைய வேக வைத்து இறக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும்.

அதே வாணலியில் அரை கப் தண்ணீர் ஊற்றி ஒன்றும் பாதியுமாக பொடித்த கல்கண்டை போட்டு பாகு காய்ச்சவும்.

பாகு லேசாக கொதித்ததும் வெந்த அரிசி, பருப்பு கலவையை சேர்த்து கிளறவும்.

மீதமிருக்கும் நெய்யையும் ஊற்றி கிளறி கெட்டியாக வரும்போது இறக்கவும்.

பிறகு முந்திரி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ சேர்த்து கிளறி பரிமாறவும்.


மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இனிதே நடைபெற்றது

May 5, 2009

மங்கலநாண் சூடும் மதுரை மீனாட்சி: மதுரையில் மங்கல மீனாட்சி மங்கலநாண் சூடிக்கொண்ட நன்னாள் இன்று. வீட்டில் நம் பெற்றவர்களுக்கு நாம் சஷ்டியப்தபூர்த்தி நடத்திப் பார்ப்பது போல, உலகத்துக்கே தாயாக விளங்கும் நம் அன்னை மீனாட்சிக்கு, அவளது பிள்ளைகளான நாமெல்லாம் இன்று திருக்கல்யாணம் நடத்தி மகிழ்ந்தோம்.

maduraimeenakshi

மலையத்துவஜனின் மகளாக அவதரித்த தடாதகைப் பிராட்டிக்கு பட்டம் சூட்டினான் மன்னன். எட்டுத்திக்கும் வெற்றி நிலைநாட்ட திக்விஜயம் புறப்பட்டாள் தேவி. கயிலைநாதனைக் கண்டாள். தனக்குஉரிய மணாளன் இவரே என்று அறிந்தாள். நல்லநாளில் முகூர்த்த வேளையில் ஈரேழு பதினான்கு உலகங்களையும் ஈன்றெடுத்த அம்மைக்கும், அப்பனுக்கும்திருக்கல்யாண வைபவத்தை நிகழ்த்த மதுரையம்பதியில் எல்லா மக்களும் கூடினார்கள். மங்கல வாத்தியங்கள் முழங்க, சொக்கேசனின் கரம் பிடித்தாள்.

சக்தியில்லாமல் சிவமில்லை. சிவமில்லாமல் சக்தியில்லை. சக்தியும் சிவமும் இணைந்தால் தானே உலக இயக்கமே நடக்கிறது. இதை நமக்கு உணர்த்தவே அம்மையப்பராக இருக்கும் இறைவனுக்கும் இறைவிக்கு திருக்கல்யாண வைபவத்தை நடத்துகிறோம்.

உலக உயிர்க்குலங்கள் அனைத்தும் உமையவளின் பிள்ளைகள். “”என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே” என்பார் மணிவாசகப்பெருமான். ஆம்! நாம் கண்கள் பெற்ற பயனை, இன்று அம்மையப்பரை திருமணக்கோலத்தில் கண்டு மகிழ்ந்ததன் மூலம் அடைந்திருக்கிறோம். அபிராமி பட்டர் தன் அந்தாதியில், “”கண்களிக்கும்படி கடம்பாடவியில் (கடம்பவனமாகிய மதுரையில்) கண்டேன்” என்று குறிப்பிடுகிறார். இத்தலத்தில் நடைபெறும் மீனாட்சி கல்யாணத்தையே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கருத வேண்டிஉள்ளது.

உமையவளுக்கு ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொருவிதமான ரூப லாவண்யம் உண்டு. அதில் மதுரைக்குரிய தனிச்சிறப்பு திருமணக்கோலம் தான். திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பெண்மைக்கே உரிய நளினமும் நாணமும் கொண்ட மீனாட்சியம்மையின் திருக் கரத்தை கம்பீரமாய் மாப்பிள்ளை மிடுக்கோடு நிற்கும், சொக்கநாதப்பெருமானின் திருக்கரத்தோடு சேர்க்கும் திருமணக்கோலம் உலகப்பிரசித்தம்.

மதுரைக்கரசி மணக்கோலம் காணும் நன்னாள் என்பதால் திருப்பூட்டும் நல்ல நேரத்தில் அவரவர் வீடுகளில் பெண்கள் எல்லோரும் திருமாங்கல்யச்சரடு மாற்றிக் கொள்வது தொன்று தொட்டு வருகின்ற மரபாகும். எல்லோராலும் கோயிலுக்குள் நுழைந்து மணக்கோலம் காண்பதென்பது நடக்கிற ஒன்றா! இதற்காகவே, புதுமாப்பிள்ளை சுந்தரேசர் இன்று இரவு யானை வாகனத்திலும், அம்பாள் பூப்பல்லக்கிலும் மாசிவீதிகளில் வலம் வந்து அருள் செய்வார்கள். நாம் நெரிசல் இல்லாமல் நமக்கு நாமே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு அவர்களை வணங்கி மகிழ்வோமே!


மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

April 8, 2009

4

5

12

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது.

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் மார்ச் 26ல் துவங்கி தினம்தோறும் ஒவ்வொரு பூஜை நடைபெற்று வருகிறது. ஏப்.2ல் விநாயகர் வழிப்பாட்டோடு முதல் கால பூஜை துவங்கியது.

நாளை, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்த இயலாததால், நேற்று காலை 5 மணியில் இருந்து 6.30 மணி வரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, வெளி பிரகாரம், உள் பிரகாரம், 2ம் பிரகாரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பரிவார தெய்வங்களான வன்னி மரத்தடி விநாயகர், துர்க்கை, மகாலெட்சுமி, வீரபத்ரர் உட்பட பல்வேறு தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து காலை 9.30 மணியில் இருந்து விசேஷசந்தி, எட்டாம் கால பூஜையுடன் பூர்ணாஹ‌த்தி நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு விசேஷசந்தி மற்றும் ஒன்பதாம் கால பூஜை நடைபெற்றது. இன்று காலை 8.30 மணியில் இருந்து ‌சிற‌ப்பு யாக பூஜைக‌ள் நடைபெறு‌கி‌ன்றன.

நாளை காலை 9.15 மணிக்கு விமானம், ராஜகோபுரங்களுக்கு சமகால மஹா கும்பாபிஷேகமும், காலை 9.30 மணிக்கு மூலவர் மீனாட்சிக்கும், காலை 9.45 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து மஹா அபிஷேகம், தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி மாசி வீதி உலா வருதல் நடைபெறுகிறது


வேதங்கள் ஒலிக்க, திருமுறைகள் ஓத மதுரை மீனாட்சி கோயிலில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

April 8, 2009

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வேதங்கள் ஒலிக்க, திருமுறைகள் ஓத கோலாகலமாக நடந்தது. இக்கோயில் திருப்பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6 கோடியில் துவங்கியது. தற்போது 320 உபயதாரர்கள் மூலம் ரூ.14 கோடிக்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 30 கிலோ தங்கத்தில் அம்மன் சன்னதி கோபுரத்திற்கு தங்க கவசம் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 கோடி. கும்பாபிஷேக பூஜைகள் கடந்த மாதம் 26ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. ஏப்.,2ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. கோயில் முழுவதும் உள்ள சன்னதிகளுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்துவது சிரமம் என்பதால் ஏப்.,6ல் அம்மன், சுவாமி சன்னதிகளை சுற்றியுள்ள பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

இதைதொடர்ந்து அதிகாலை 3.30 மணிக்கு பனிரெண்டாம்கால யாக பூஜை நடந்தது. 5 மணிக்கு ஐந்து ராஜகோபுரங்கள் உட்பட 14 கோபுரங்களுக்கு கும்பநீரை சிவாச்சாரியர்கள் எடுத்துச் சென்றனர். அம்மன், சுவாமி தங்க விமானத்தில் காலை 8 மணிக்கு கும்பநீர் கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் நடந்தன. காலை 9.17 மணிக்கு அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து கண்ணன் பச்சை கொடி காட்ட, “ஓம் நமசிவாயா’ என்று பக்தர்கள் முழங்க, ஒரே நேரத்தில் தங்க கோபுரங்கள் உட்பட அனைத்து கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் நீர் தெளிப்பான் இயந்திரங்கள் மூலம் புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. பின்னர் மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. fpnmix_45882815123


‘மின் வினியோகம் கணிசமாக சீரடைந்துள்ளது’

January 22, 2009

சென்னை :”அரசு எடுத்துள்ள முயற்சிகளால், தமிழகத்தில் மின் வினியோகம் கணிசமான அளவுக்கு சீரடைந்துள்ளது’ என, கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து கவர்னர் உரையில் இடம்பெற்ற அறிவிப்பு:தமிழகத்தில் தொழில் வளம் பெருகி வருவதால், மின் தேவை இரண்டு ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளது.

தமிழக மின்வாரியத்தின் மின் நிலையங்களின் உற்பத்தியை திறம்பட நிர்வகித்தும், பிற மாநிலங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்தும் மின் வினியோகத்தை சீரமைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துள்ளது. இதனால், கடந்த மாதம் முதல் மின் வினியோகம் கணிசமான அளவு சீரடைந்துள்ளது.மின் உற்பத்தியைப் பெருக்க, பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வடசென்னையில் 1,200 மெகாவாட் மற்றும் மேட்டூரில் 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட கூடுதல் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவும் பணிகள், 2008ம் ஆண்டில் துவங்கப்பட்டுள்ளன.

“பெல்’ நிறுவனத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு உற்பத்தி நிலையங்களை நிறுவ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.இவை தவிர, தற்போது முடிவடையும் நிலையில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உற்பத்தியில் தமிழகத்தின் பங்காக 925 மெகாவாட் மின்சாரமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் கூடுதலாக 325 மெகாவாட் மின்சாரமும் இந்த ஆண்டு கிடைக்கும். இத்திட்டங்களின் மூலம் வரும் ஆண்டுகளில் தமிழகத்தின் மின் தேவை முழுவதுமாக நிறைவடையும். இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.


5 இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை

January 14, 2009

புதுதில்லி

ஐந்து முக்கிய் இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது.

2011ஆம் ஆண்டு வரை, விப்ரோ டெக்னாலஜிஸ், மெகா சாப்ட், நெஸ்டர் பார்மாசூட்டிக்கல்ஸ், கேப் இண்டர்நேஷனல் மற்றும் சுரேந்திரா சிங் ஆகிய இந்த 5 நிறுவனங்களுக்கும் உலக வங்கி தடை விதித்து இருக்கிறது.

வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாலும், பல விதிமுறைகளை மீறி இருப்பதாலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

அண்மையில், ரூ.7 ஆயிரம் கோடி அளவில் முறைகேடு நடந்த இந்தியாவில் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான சத்யம் கம்ய்யூட்டர்ஸ் நிறுவனத்துக்கு உலக வங்கி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது


செல்பேசிகளுக்கு அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள்

November 19, 2007

மக்கள்தொகையில் நூறு கோடியை தாண்டிய இந்தியாவில் 16 சதவீதம் பேர் செல்பேசியை பயன்படுத்துகிறார்கள் என்பது உலக அளவில் செல்பேசிகளுக்கு இந்தியா எப்படி ஒரு மாபெரும் சந்தையாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது.

இது குறித்து இந்திய செல்பேசி ஆபரேட்டர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு முக்கியத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஜிஎஸ்எம் மொபைல் ஆபரேட்டர்கள் 57.15 லட்சம் செல்பேசி வாடிக்கையாளர்களை கூடுதலாக சேர்த்துள்ளது. இதில் 20 லட்சம் வாடிக்கையாளர்களை பார்தி ஏர்டெல் நிறுவனம் அக்டோபர் மாதத்தில் மட்டும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உள்ள 22 சரகங்களில் செல்பேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சுமார் 16 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் வாடிக்கையாளர்கள் சேர்க்கப்படவில்லை.

ரிலையன்ஸ் டெலிகாம் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 7 சரகங்களில் தனது சேவைகளை வழங்கி வருகிறது ரிலையன்ஸ். ஆனால் கடந்த 3 மாதங்களாக தங்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடுவதில்லை என்பதால் இந்த கணக்கீட்டில் அந்த நிறுவனம் சேர்க்கப்படவில்லை.

ஜிஎஸ்எம் மொபைல் ஆபரேட்டர்களை பிரதிநிதித்துவம் செய்யும் இந்தியா செல்லுலார் ஆபரேட்டர்ஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தனது 31.88 சதவீத சந்தைப் பங்கீட்டுடன் பார்தி ஏர்டெல் முதலிடம் வகிக்கிறது.

அக்டோபரில் மட்டும் 20.32 வாடிக்கையாளர்களை கூடுதலாகப் பெற்றுள்ள பார்தி ஏர்டெல்லின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 5.09 கோடியாக அதிகரித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்திற்கு அடுத்த படியாக 3.71 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ள வோடஃபோன் எஸ்ஸார் 2வது இடத்தில் உள்ளது. 3.10 கோடி வாடிக்கையாளர்களுடன் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் 3-ம் இடத்தில் உள்ளது.

1.94 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட ஐடியா நிறுவனம் 4-வது இடத்திலும், 85,24,005 வாடிக்கையாளர்களைக் கொண்ட ஏர்செல் 5-வது இடத்திலும் உள்ளன.

ரிலையன்ஸ், ஸ்பைஸ், எம்.டி.என்.எல், பி.பி.எல் ஆகிய நிறுவனங்கள் வரிசையில் அடுத்தடுத்து உள்ளன.


டி.டி.எச் வரவால் நிம்மதி அடையும் கட்டண சானல்கள்

September 14, 2007

தங்களது ஒளிபரப்பு சேவைகளை மக்கள் காண கட்டணம் வசூலித்து வரும் தொலைக்காட்சி சானல்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்து வந்தன.

குறிப்பிட்ட கேபிள் நிறுவனம் மக்களிடமிருந்து மாதாமாதம் வசூலிக்கும் கட்டணத்தை இது போன்ற கட்டண தொலைக்காட்சி சானல்களுக்கு குறித்த காலத்தில் செலுத்துவதில்லை. ஆனால் இதற்காக ஒளிபரப்பை துண்டிக்க முடியாது.

ஏனெனில் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் விளம்பரதாரர்கள் இதற்கு மறுப்பு தெரிவிப்பார்கள். இது நீண்ட நாட்களாக இருந்து வரும் ஒரு பிரச்சனைதான்.

ஆனால் தற்போது டைரக்ட் டு ஹோம் என்ற டி.டி.எச் சேவைகள் இந்த கட்டண சானல்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும்போது இந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு ஏற்படுவதில்லை என்பதால் கட்டண சானல்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றன.

தற்போது டாடா ஸ்கை என்ற டி.டி.எச் சேவைக்கு சோனி தொலைக்காட்சி நிறுவனம் ஒரு ஒப்பந்தத்தையும், டிஷ் டிவி என்ற டி.டி.எச் நிறுவனத்துடன் வேறு மாதிரியான ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளலாம். இந்த ஒப்பந்த விவரங்களை கட்டண சானல்கள் வெளியிட வேண்டிய அவசியம் தற்போது இல்லை.

இந்திய தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராயும் இதனை ஒளிபரப்பாளர்களிடையே உறுதி பட அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு ஸ்டார் தொலைக்காட்சிக் குழுமம் தொடர்பான வழக்கு ஒன்றில் ஸ்டார் தொலைக்காட்சியின் 14 சானல்களையும் ஸீ நிறுவனத்தின் டிஷ் டிவிக்கு கேபிள் டிவி கட்டணத்தைக் காட்டிலும் 50 சதவீதம் குறைவாக கொடுக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இனி அதுபோன்று உத்தரவிடமுடியாது என்பதே கட்டண சானல்களின் நிம்மதிப் பெருமூச்சிற்கு காரணம்.

டிராய் இதற்கு தெளிவாக விதிகளை வகுத்து வைத்துள்ளது. ஒரு தொலைகாட்சி ஒளிபரப்பு குழுமத்தின் தனிப்பட்ட சானல்களுக்கு ஒரு கட்டணம் அல்லது அனைத்து சானல்களும் வேண்டுமா அதற்கு ஒரு கட்டணம் என்று நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

எந்த ஒரு டி.டி.எச் நிறுவனத்திற்கும் ஒளிபரப்பு சானல்களும் இஷ்டப்படி ஒப்பந்தம் செய்துகொண்டாலும் அது பெரும்பாலும் டிராய் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறாது இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

டிராய் உருவாக்கிய இந்த புதிய விதிமுறை இன்டர் கனெக்‌ஷன் கட்டுப்பாட்டு விதிகள் என்று அழைக்கப்படுகிறது.

கட்டணம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை டிராய் குறிப்பிடவில்லை என்பதால் எந்த ஒரு டி.டி.எச் நிறுவனமும் எந்த ஒரு ஒளிபரப்பு சானல்களுடனும் தங்களது ஒப்பந்தங்களை சுதந்திரமாக பேசி முடிவெடுக்க முடியும் என்பது ஒரு முக்கியமான முன்னேற்றமே.

கட்டணங்களை அந்தந்த சந்தைகள் தீர்மானிக்கும். சந்தை விதிகளை மீறி கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதால் ஆரோக்கியமான போட்டிகள் உருவாகும். எனவே இது ஒரு நல்ல முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.

இதற்கு முன்பு ஸ்டார் தொலைக்காட்சிக் குழுமம் தொடர்பான வழக்கு ஒன்றில் ஸ்டார் தொலைக்காட்சியின் 14 சானல்களையும் ஸீ நிறுவனத்தின் டிஷ் டிவிக்கு கேபிள் டிவி கட்டணத்தைக் காட்டிலும் 50 சதவீதம் குறைவாக கொடுக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இனி அதுபோன்று உத்தரவிடமுடியாது என்பதே கட்டண சானல்களின் நிம்மதிப் பெருமூச்சிற்கு காரணம்.

டிராய் இதற்கு தெளிவாக விதிகளை வகுத்து வைத்துள்ளது. ஒரு தொலைகாட்சி ஒளிபரப்பு குழுமத்தின் தனிப்பட்ட சானல்களுக்கு ஒரு கட்டணம் அல்லது அனைத்து சானல்களும் வேண்டுமா அதற்கு ஒரு கட்டணம் என்று நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

எந்த ஒரு டி.டி.எச் நிறுவனத்திற்கும் ஒளிபரப்பு சானல்களும் இஷ்டப்படி ஒப்பந்தம் செய்துகொண்டாலும் அது பெரும்பாலும் டிராய் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறாது இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

டிராய் உருவாக்கிய இந்த புதிய விதிமுறை இன்டர் கனெக்‌ஷன் கட்டுப்பாட்டு விதிகள் என்று அழைக்கப்படுகிறது.

கட்டணம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை டிராய் குறிப்பிடவில்லை என்பதால் எந்த ஒரு டி.டி.எச் நிறுவனமும் எந்த ஒரு ஒளிபரப்பு சானல்களுடனும் தங்களது ஒப்பந்தங்களை சுதந்திரமாக பேசி முடிவெடுக்க முடியும் என்பது ஒரு முக்கியமான முன்னேற்றமே.

கட்டணங்களை அந்தந்த சந்தைகள் தீர்மானிக்கும். சந்தை விதிகளை மீறி கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதால் ஆரோக்கியமான போட்டிகள் உருவாகும். எனவே இது ஒரு நல்ல முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.